சாவகச்சேரிபகுதியில் சட்டவிரோத மண் அகழ்வுப் ஈடுபட்டவர்கள் கைது..!
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் இன்று (10.01.2026) சனிக்கிழமை அதிகாலை வேளையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு வாகனங்களை கைப்பற்றியதோடு சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சாவகச்சேரி பொலிஸார் இரு டிப்பர் வாகனங்கள், இரு உழவு இயந்திரங்கள், மண் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியதோடு சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

