ஆலம் குளம் அஸ்ரப் ஞாபகார்த்த முன்பள்ளியின் விடுகை விழா..!

ஆலம் குளம் அஸ்ரப் ஞாபகார்த்த முன்பள்ளியின் விடுகை விழா..!

அட்டாளைச்சேனை புறத்தோட்ட வட்டாரம் ஆலங்குளம் அஸ்ரப் ஞாபகார்த்த முன்பள்ளியின் விடுகை விழாவானது நேற்றைய தினம் (09.01.2026)திருமதி சஸ்னா ஆசிரியையின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின்

புறத்தோட்ட வட்டாரத்தின் பல்வகை ஆளுமை,புறத்தோட்ட வட்டாரத்தின் அபிவிருத்தி புயல் ஆலம் குளத்தைச் சேர்ந்த எஸ்.பாஹிமா,ஆலம் குளம் றஹ்மானியா வித்தியாலயத்தின் அதிபர் கே.எல்.முனாஸ், ஆலங்குளம் ரஹ்மானியா வித்தியாலயத்தின் அபிவிருத்தி சங்க செயலாளர் பயில் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரபல சமூகசேவகர் ஏ.ஏ.எம்.பமில்,றகுமானியா வித்தியாலய ஆங்கில ஆசிரியை

திருமதி ஹபீபா அதிதிகளாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

மற்ற இடங்களைப் போல் அல்லாது

ஆடல் ,பாடல் ,குத்து, கும்மாளம், பெற்றோர் சுமைக்கான செலவுகள் எதுவும் இல்லாது எளிமையாகவும்,

அறிவு பூர்வமாகவும் ,மாணவர்களுடைய

ஆற்றல், அறிவு, திறன்களை அறிந்து கொள்ளக்கூடிய விளையாட்டுடன் கூடிய நிகழ்வு சிறப்பாக நடைபெற்றமை எல்லோரதும் மனதை நெகிழ வைத்தது .

Recommended For You

About the Author: admin