கொரதொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு..!
ஒருவர் பலி
நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று (01.01.2026) இரவு 10 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மூன்று ஆண்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏனைய இருவர் காயமடைந்தனர்.
அவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

