தரம் 6 கற்றல் தொகுதி விசாரணை
நிறைவடையும் வரை NIE
பணிப்பாளர் நாயகம் இராஜினாமா..
தேசிய கல்வி நிர்வாகத்தின் பணிப்பாளர் மஞ்சுளா விதான பதிரன தற்காலிகமாக
தன்னுடைய பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தரம் 6 இன் ஆங்கில மொழி மொடியூல் ஒன்றில் ஓரினச்சேர்க்கை இணையள
முகவரி ஒன்று பொறிக்கப்பட்டு
உள்ள சர்ச்சையை தொடர்ந்து இந்த விசாரணைகள் முடியும் வரை அவர்
தற்காலிகமாக தனது
பதவியில் இருந்து விலகி உள்ளார்..
கல்வித் துறையிலும் அரசியல் பரப்பிலும் நாட்டிலும் பெரும் பேசுபொருள் ஆகியுள்ள இந்த விடயம்
தற்போது தேசியக் கல்வி
நிருவகத்தின் உள்ளக விசாரணை
பிரிவாலும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தாலும் வெவ்வேறாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு
உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

