கொஹுவளையில் துப்பாக்கிச் சூடு: பாடசாலை மாணவி காயம்

கொஹுவளை, சரவணக்க வீதி, போதியாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த 16 வயது பாடசாலை மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிதாரிகள் தவறான வீட்டை இலக்கு வைத்திருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வீட்டிற்கு அருகில் உள்ள வீடே அவர்களின் உண்மையான இலக்காக இருந்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

காயமடைந்த மாணவி சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தற்போதைய நிலை குறித்த தகவல்களை மருத்துவ அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.

Recommended For You

About the Author: admin