முல்லைத்தீவு மாணவியின் இறுதி ஊர்வலத்தில் மாணவியின் உடலைச் சுமந்து சென்ற சக தோழிகள்..!
கடந்த ஞாயிற்றுக்கிழமை (21.12.2025) முல்லைத்தீவு சிலாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி உணவு உண்ட நிலையில் ஒவ்வாமை ஏற்பட்ட நிலையில் மாஞ்சோலைப் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தைகளுக்கான பிரிவு வைத்தியர் பார்வையிட்ட பின்னர் உயிரற்ற சடலமாகவே குறித்த சிறுமி பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் இன்று (24.12.2025) இடம்பெற்ற சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் சக தோழிகள் கண்ணீர்மல்க உடலைத் தூக்கிச் சென்ற காட்சி காண்போர் நெஞ்சை உலுக்குவதாக அமைந்திருந்தது.


