ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு எதிராக ஹத்துருசிங்க மீண்டும் வழக்கு..!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக மீண்டும் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு மத்தியஸ்த நீதிமன்றத்திலேயே அவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமது ஒப்பந்தக் காலம் முடிவடைவதற்கு முன்னரே ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் ஏற்பட்ட களங்கம் மற்றும் நிதி இழப்புக்கு நஷ்டஈடு கோரி, அவர் ஏற்கனவே அந்த நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கின் ஊடாக, வருமான இழப்பு, நியாயமான வாய்ப்பு மறுக்கப்பட்டமை மற்றும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளை இலங்கை கிரிக்கெட் சபை மீது சுமத்தி, ஹத்துருசிங்க 5 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு கோரியிருந்தார்.

