உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பெற்றுள்ள மேலதிக வருமானம்..!
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வருமான இலக்குகளை விடவும், 50 பில்லியன் ரூபாய் மேலதிக வரி வருமானத்தை ஈட்டியுள்ளது.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அறிக்கை ஒன்றை விடுத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
வீண் விரயத்தைக் குறைப்பதன் மூலம் வரி செலுத்துவோர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியமையே, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வருமான இலக்குகளையும் விட அதிக வருமானத்தை பெற பிரதான காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

