FIFA Arab Cup 2025: பாலஸ்தீனம், சிரியா காலிறுதிக்குத் தகுதி
கத்தாரில் நடைபெற்று வரும் FIFA அரபு கோப்பை 2025 கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் A பிரிவில் நடந்த லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீனம் மற்றும் சிரியா அணிகள் தலா 5 புள்ளிகளைப் பெற்று, காலிறுதிக்குத் (Quarter-Finals) தகுதி பெற்றுள்ளன.
அதேவேளை, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துனிசியா அணி 3 போட்டிகளில் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று, நூலிலையில் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.
குறிப்பாக, போட்டியை நடத்தும் கத்தார் அணி, குரூப் A பிரிவில் ஒரு வெற்றி கூட பெறாமல், வெறும் 1 புள்ளியுடன் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

