பேரிடரால் பலியானோரின் எண்ணிக்கை 627 ஆக உயர்வு!

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அனர்த்தங்களால் 190 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

27,663 குடும்பங்களைச் சேர்ந்த 89,857 தனிநபர்கள் 956 பாதுகாப்பான மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,179,138 ஆகும்.

Recommended For You

About the Author: admin