மொரகஹகந்த நீர்த்தேக்கம் நிரம்பும் அபாயம்: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க கோரிக்கை!
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது 97.87% ஆக உயர்ந்துள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்னும் சில நாட்களுக்கு மழை தொடர்ந்தால், இந்த நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்புவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் உள்ள மக்கள், நீர் திறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அதனால் தாழ்வான பகுதிகளில் ஏற்படும் வெள்ள அபாயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, விழிப்புடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

