கடந்த 24 மணி நேரத்தில் கிளிநொச்சியில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு

கடந்த 24 மணி நேரத்தில் கிளிநொச்சியில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு

​இன்று அதிகாலை 6.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

​கிளிநொச்சியில் உள்ள புளியம்பொக்குணை பகுதியில் 274 மில்லிமீட்டர் (மி.மீ.) மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

​அடுத்தபடியாக அதிக மழைவீழ்ச்சி பதிவான பகுதிகள்:

​மன்னார் மாவட்டம்: போர்ட்கெர்னியில் 210 மி.மீ மழையும், மரிச்சுக்கட்டி பகுதியில் 208 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

​மடு பிரதேச செயலகத்தில் 193.5 மி.மீ மழையும்,

​கேகாலை மாவட்டத்தில் உள்ள துனமலைப் பகுதியில் 181.5 மி.மீ மழையும் இந்த காலப்பகுதியில் பதிவாகியுள்ளது.

Recommended For You

About the Author: admin