அணைக்கட்டை சீரமைக்கச் சென்ற போது காணாமல் போன கடற்படை வீரர்களின் புகைப்படங்கள் வெளியானது.!!

அணைக்கட்டை சீரமைக்கச் சென்ற போது காணாமல் போன கடற்படை வீரர்களின் புகைப்படங்கள் வெளியானது.!!

சுண்டிக்குளம் சாலை பகுதியில் தொடுவாய் வெட்டச் சென்ற ஐந்து கடற்படையினர் கடந்த வெள்ளிக் கிழமை காணாமல் போயிருந்தனர்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்

நாடு முழுவதும் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் நாடு முழுவதும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது

இதனால் சுண்டிக்குளம்,சாலை பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறுகள் நிரம்பி வழிகின்றது

குறித்த பகுதிகளில் கடற்படை முகாம் உட்பட்ட பல பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டது.வெள்ள நீரை கடலுக்குள் விடும் முயற்சியில் கடந்த வெள்ளிக் கிழமை தொடுவாய் வெட்டுவதற்காக சென்ற சாலை கடற்படை முகாமை சேர்ந்த ஐந்து கடற்படை வீரர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளார்கள்

காணாமல் போனவர்களை தேடும் பணி இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மீட்பு நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளது

மீண்டும் நாளை காணாமல் போன கடற்படை வீரர்களை தேடும் பணி ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin