பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை..!

பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை..!

அம்பத்தலை அணை பெருக்கெடுக்கிறது

களனி ஆற்றின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளமையினால், அம்பத்தலை வெள்ளக் கட்டுப்பாட்டு அணை பெருக்கெடுத்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் பதில் பொறியியலாளர் ஏ.எச். துஷாரி அவர்களின் கையொப்பத்துடன் இன்று (30) அதிகாலை 03.15 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

அம்பத்தலை வெள்ளக் கட்டுப்பாட்டு அணைக்கும், மாலபே – கடுவெல பிரதான வீதிக்கும் இடைப்பட்ட பகுதி மற்றும் அதற்கு மேலதிகமாக உள்ள தாழ்வான நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இது குறித்து உடனடியாகத் தெரியப்படுத்தி, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த அறிவிப்பில் கோரப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin