இளம் தம்பதி பலியான சோகம்!
இலங்கை பேரனர்த்தத்தில் நாடு முழுவதும் நூற்றுக் கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். மேலும் இதுவரை 150 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வரும் நிலையில் அவர்களது அடையாளம் மற்றும் விபரங்களும் தொடர்ந்து வெளியாகிய வண்ணமுள்ளன.
இந்நிலையில், கெப்பற்றிப்பொல பிரதேசத்தில் உயிரிழந்த தம்பதியினரின் படங்களும் வெளியாகியுள்ளன.
இளம் தம்பதிகளான இருவரும் கெப்பற்றிப்பொல, கல்பிஹில்ல பகுதியில் ஹோட்டல் ஒன்றில் இருந்துள்ளனர்.
இந்நிலையிலேயே இச்சோகம் இடம்பெற்றுள்ளது. மண்சரிவில் சிக்கி உயிரிழந்த பலரின் சடலங்கள் இன்றைய நாள் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டு வரும் சோகம் நாட்டையே உலுக்கியுள்ளது.

