வரக்காபொல துல்ஹிரியவில் பாரிய மண்சரிவு: 20 பேர் மாயம்!
வரக்காபொல, துல்ஹிரிய பிரதேசத்தில் சற்று முன்னர் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் அனர்த்தத்தில் சிக்கி அங்கிருந்த சுமார் 20 பேர் காணாமல் போயுள்ளதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

