கலா ஓயா பேருந்து விபத்து: 14 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!
அனுராதபுரம்–புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தில் வெள்ளம் அதிகரித்து வரும் நிலையில், அதில் சிக்கிய பேருந்து இழுத்துச் செல்லப்பட்டதால், பயணிகள் அருகில் இருந்த வீட்டின் கூரையில் தஞ்சம் புகுந்தனர். இதனையடுத்து, அங்கு ஒரு பெரிய மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
நேற்று இரவு அபாயகரமான வெள்ள மட்டம் காரணமாக மீட்க முடியாத நிலையில் உள்ள பயணிகள், மோசமான வானிலை காரணமாக இன்னும் சிக்கித் தவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிக்கியவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற கடற்படை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
👉 புதிய தகவல்:
கலா ஓயா பாலத்தில் சிக்கித் தவித்த பேருந்து பயணிகளில் 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை கடற்படை பேச்சாளர் அறிவித்துள்ளார்.
இன்று காலை (நவம்பர் 29) கடற்படையின் தற்போதைய முயற்சிகளை நேரடியாக அவதானித்தவாறு, இந்த மீட்புப் பணியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கண்காணித்தார்.
இலங்கை கடற்படையானது, விரைவு நடவடிக்கை படகுப் பிரிவு (RABS), கடற்படை நீச்சல் பிரிவு மற்றும் சிறப்புப் படகுப் பிரிவு ஆகியவற்றின் கூடுதல் பணியாளர்களுடன் இந்த மீட்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

