‘டித்வா’ சூறாவளி தீவிரம் குறைகிறது – நவம்பர் 29 காலை நிலவரம்
சூறாவளி வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்தியாவின் தமிழ்நாடு கடற்கரையை நெருங்க வாய்ப்புள்ளது.
இன்று (நவம்பர் 29) மழை குறைந்து நாளை (நவம்பர் 30) முதல் கணிசமாகக் குறையும்.
வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேற்கு மாகாணங்கள்: விட்டுவிட்டு மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 100 மி.மீ இற்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சப்ரகமுவ, மேல் மாகாணங்கள், காலி, மாத்தறை மாவட்டங்கள்: அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாட்டின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மணிக்கு (60-70) கி.மீ வேகத்திலும், இடையிடையே (80-90) கி.மீ வேகம் வரையிலும் மிக பலத்த காற்று வீசக்கூடும்.
பொதுமக்களுக்கான வேண்டுகோள்:
கனமழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், மேலும் இது தொடர்பான வானிலை ஆய்வுத் துறையின் ஆலோசனைகளை கவனத்துடன் பின்பற்றுமாறும் பொதுமக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


