இனச் சமத்துவத்திற்குத் தமிழ் வரலாறு கட்டாயம்: நாடாளுமன்றில் சாணக்கியன் வலியுறுத்தல்!

இனச் சமத்துவத்திற்குத் தமிழ் வரலாறு கட்டாயம்: நாடாளுமன்றில் சாணக்கியன் வலியுறுத்தல்!

எதிர்காலத்தில் அனைத்து இன மக்களும் சமமான அந்தஸ்துடன் வாழ்வதற்குத் தயாராவதற்கு, தமிழர்களின் வரலாற்றை உள்ளடக்கிய வரலாற்றுப் பாடத்தைக் கட்டாயப் பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இந்த முக்கிய கோரிக்கையை முன்வைத்தார்.

தமிழர்களின் வரலாற்றை அனைத்து இன மாணவர்களும் கட்டாயம் அறிந்துகொள்வதன் மூலமே இனங்களுக்கு இடையிலான சமத்துவத்தை நிலைநாட்ட முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கல்வி மறுசீரமைப்புக்கு ஆதரவு

இதேவேளை, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தற்போதைய கல்வி மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்குத் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பி. சத்தியலிங்கம் இதன்போது குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: admin