தம்புள்ளை: மேலதிக வகுப்பில் சிறுமி துஷ்பிரயோகம்; ஆசிரியர் தலைமறைவு!

தம்புள்ளை: மேலதிக வகுப்பில் சிறுமி துஷ்பிரயோகம்; ஆசிரியர் தலைமறைவு!

தம்புள்ளை: பாடசாலை விடுமுறை காலத்தில் மேலதிக வகுப்பிற்கு சென்ற 3ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, அதே பாடசாலையின் ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் தம்புள்ளை பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னர் சந்தேக நபரான குறித்த ஆசிரியர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக தம்புள்ளை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி
பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவியின் பெற்றோர், இது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 24) தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

சந்தேகநபரான ஆசிரியர், பாடசாலை விடுமுறை நாட்களிலும் மேலதிக வகுப்பு நடத்துவதாகக் கூறி சில மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து கற்பித்துள்ளார். இதன்போதே, மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவி துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தலைமறைவாகியுள்ள சந்தேக நபரான ஆசிரியரைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளை தம்புள்ளை தலைமையகப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin