மிதிகம வர்த்தகர் உட்பட 7 பேரை கொல்ல திட்டமிட்டவர் கைது..!

மிதிகம வர்த்தகர் உட்பட 7 பேரை கொல்ல திட்டமிட்டவர் கைது..!

மிதிகம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் உட்பட ஏழு பேரை கொலை செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது தப்பியோடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம பொலிஸார் நேற்றைய தினம் (23) குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

 

மிதிகம பிரதேச வர்த்தகர் உள்ளிட்ட ஏழு பேரை கொலை செய்வதற்காக வந்த துப்பாக்கிதாரிகளுக்கு தங்குமிட வசதிகளை இவரே வழங்கியுள்ளார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

வர்த்தகர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது கிடைத்த தகவலின் அடிப்படையில், மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் ஒலுகல தலைமையிலான அதிகாரிகள் குழு அண்மையில் மிதிகமவில் உள்ள வீடொன்றை சோதனையிட்டது.

 

அப்போது T-56 ரக துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 

அந்த சந்தர்ப்பத்தில் இரண்டு சந்தேகநபர்கள் தப்பியோடியிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

 

இதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த வீட்டின் உரிமையாளர் வெலிகம, இப்பாவல பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சந்தேகநபர் மிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் எனவும், அவரை மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin