பாரிஸில் இளவரசி டயானாவுக்கு மெழுகு சிலை.!!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள Musée Grévin அருங்காட்சியகத்தில் இளவரசி டயானாவுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

பரிசில் உள்ள Pont de l’Alma சுரங்கத்தில் மகிழூந்து விபத்தில் டயானா உயிரிழந்து 28 ஆண்டுகள் நினைவை ஒட்டி அவரது திரு உருவம் மெழுகில் செய்யப்பட்டுள்ளது.

டயானாவின் புகழ்பெற்ற ‘பழிவாங்கும் உடை’ அணிந்திருப்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சார்லஸிடம் இருந்து டயானா பிரிந்ததன் பின்னர் அவர் ஜூன் 29, 1994ம் ஆண்டு இந்த உடையினை அணிந்துகொண்டு Serpentine Gallery நிகழ்வுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin