உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கால்பந்து விளையாடுவதைப் போல ஒரு காணொளி அண்மையில் வெளியாகியது.
ஓவல் அலுவலகத்தில் இருவரும் கால்பந்து விளையாடுவது போன்று குறித்த காணொளியில் காணப்பட்டது.
எனினும் அந்த காணொளி செயற்கை நுண்ணறிவு ஊடாக தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த காணொளியை ட்ரம்பே தனது சமூக ஊடகத்தில் பதிவேற்றியமை குறிப்பிடத்தக்கது.

