அமைச்சர்களின் ஊடக செயலாளர்களுக்கு இனி ஊடக அடையாள அட்டை இல்லை!

அமைச்சர்களின் ஊடக செயலாளர்களுக்கு இனி ஊடக அடையாள அட்டை இல்லை!

அமைச்சர்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஊடக அடையாள அட்டைகளை (Media ID) வழங்குவதை அரசாங்க தகவல் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பெருமளவான ஊடக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதே இதற்கு காரணம் என தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார தெரிவித்துள்ளார். குறிப்பாக, சில ஊடக நிறுவனங்கள் வரையறையே இல்லாமல் விண்ணப்பித்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எண்ணிக்கையில் வீழ்ச்சி கடந்த 2024 ஆம் ஆண்டு 8,100 அட்டைகள் வழங்கப்பட்ட நிலையில், இம்முறை அது 4,800 ஆக பாதியாக குறைந்துள்ளது. இது ஊடக அடக்குமுறை அல்ல என்றும், தேவையற்ற விதத்தில் வழங்கப்படுவதை தடுக்கும் முறையான நடவடிக்கை என்றும் ஹர்ஷ பண்டார தெளிவுபடுத்தியுள்ளார்

Recommended For You

About the Author: admin