தெதுரு ஓயா, பொல்கொல்ல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு..!

தெதுரு ஓயா, பொல்கொல்ல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு..!

தற்போது பெய்து வரும் அதிக மழை காரணமாக, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

வான்கதவுகள் ஒவ்வொன்றும் ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து வினாடிக்கு மொத்தமாக 1,400 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இதேவேளை, இன்று அதிகாலை முதல் பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொல்கொல்ல மகாவலி அதிகார சபைக்கு பொறுப்பான பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 18 அங்குலம் வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வினாடிக்கு மொத்தமாக 9,000 கன அடி நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு வெளியேற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

பொல்கொல்ல மஹாவலி அணைக்குக் கீழ் உள்ள மக்கள் மஹாவலி கங்கையைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு பொல்கொல்ல மகாவலி அதிகார சபைக்கு பொறுப்பான பொறியியலாளர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Recommended For You

About the Author: admin