கைதடியில் சர்வதேச முதியோர் தின வாரம்

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நீண்ட கால வரலாற்றை கொண்ட யாழ்ப்பாணம் கைதடி சித்த போதனா வைத்தியசாலையில் முதியோர் தின வாரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனை முன்னிட்டு நேற்றையதினம் காலை 11.00 மணியளவில்  விடுதியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சிறிய பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன், கலந்துரையாடல், மகிழ்ச்சிபடுத்தும் நிகழ்வுகள் என்பனவும் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டன.

இதில் வைத்தியசாலை பொறுப்பதிகாரி (MOIC)  I. ஜெபநாப கணேசன்  மற்றும் ஏனைய வைத்திய அதிகாரிகள், உள்ளக பயிற்சி வைத்தியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வைத்திய பொறுப்பு அதிகாரி கருத்து தெரிவிக்கையில், தொடர்ச்சியாக அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு ஒவ்வொரு விடுதிகளிலும் முதியோரை சந்தோஷப்படுத்தும் வகையில் முதியோர் தின நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டார். மற்றும் முதியோர்களின்  உடல் திடகாத்திரமாகவும், உடல் ரீதியான நோய் நொடி இன்றியும் இருக்க வேண்டும் என்று கருத்துகளையும் முன் வைத்தார். முதியோரின் உணவு ஆலோசனைகள் தொடர்பான கருத்துக்களையும் முன் வைத்து இருந்தார்.

Recommended For You

About the Author: webeditor