வெலிமடை பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி..!

வெலிமடை பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி..!

வெலிமடை, போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட தம்பதியினரில் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், கணவர் காணாமல் போயுள்ளார்.

நேற்று (17.11.2025) மாலை வெலிமடைப் பிரதேச செயலாளர் பிரிவில் பெய்த அதிக மழை காரணமாக இவர்கள் இருவரும் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

நேற்று இரவு முழுவதும் பிரதேசவாசிகளால் இந்தத் தம்பதியினரைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன்போது மனைவியின் சடலம் மீட்கப்பட்டதாகவும் ‘அத தெரண’ செய்தியாளர் தெரிவித்தார்.

 

இவ்வாறு உயிரிழந்தவர் 32 வயதுடைய பெண் ஆவார். காணாமல் போனவர் 37 வயதுடைய ஆண் ஆவார். காணாமல் போனவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin