சிலாபம் காக்கா பள்ளி பகுதியில் துப்பாக்கி மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது
சிலாபம், காக்கா பள்ளிப் பகுதியில் வைத்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்கள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
ஆயுதங்களுடன் சேர்த்து, சுங்க வரியில்லா 460 சிகரெட் கட்டுகள் மற்றும் 202 லீட்டர் ‘கோடா’ (சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கான மூலப்பொருள்) ஆகியவையும் சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர், அக்கரைப்பற்றைச் சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார்.

