பகல் நேர பராமரிப்பு நிலையம் தொடர்பாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறி..!
கௌரவ ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பகல் நேர பராமரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு அமைவாக சமூக சேவைகள் திணைக்களத்தின் நேரடியான மேற்பார்வையின் கீழ் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நடுவூத்து கிராம சேவையாளர் பிரிவில் பகல் நேர பராமரிப்பு நிலையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
இது பகல் நேர பராமரிப்பு நிலையத்தில் ஆறு மாத தொடக்கம் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பது தொடர்பான பயிற்சிநெறி கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சமூக சேவைகள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளரின் வழிநடத்தலுக்கு அமைவாக நேற்று (15) கிண்ணியா பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் உரையாற்றும் போது இது திருகோணமலை மாவட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து எனவும் இதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்கி இத் திட்டத்தில் மிகப்பெரிய ஒரு வளர்ச்சியை நாங்கள் அடைய வேண்டும் என்றும் கூறினார். மேலும் பகல் நேர பராமரிப்பு நிலையத்தினை திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவை தெரிவு செய்தமைக்கு சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் அவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் சமூக சேவைகள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் உரையாற்றும் போது இன்று ஒரு சந்தோஷமான நாள் எனவும் அதாவது மாற்றுத்திறனாளி பிள்ளைகளை பராமரிப்பு தொடர்பாக ஏற்கனவே உங்களுக்குள்ள அனுபவங்களையும் அதில் இருக்கிற சில நுட்பமான விடயங்களையும் இன்று இற்றைப்படுத்திக் கொள்வதற்கு ஒரு சரியான சந்தர்ப்பம் இது எனவும் இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி மாற்றுத்திறனாளி பிள்ளைகளை சரியான முறையில் வளப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்ட சமூகநலன்புரி அத்தியேட்சகர் அவர்களினால் மாற்றுத்திறனாளி மாணவர்களை அவர்களின் வயதுக்கு ஏற்றவாறு எவ்வாறு பராமரிப்பது என்றும் பகல் நேர பராமரிப்பு நிலையத்தில் எவ்வாறான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்களுடைய திறன்களை அடையாளம் காணலாம் என்பது தொடர்பான விரிவான விளக்கங்களும் வழங்கப்பட்டது.
மேலும் இரண்டு மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடைய தாய்மார்கள் இரண்டு பேர் இந்நிகழ்வுக்காக அழைக்கப்பட்டு இவர்கள் இப்பிள்ளைகளை சிறுவயதில் இருந்து இன்று வரை எவ்வாறான சவால்களை எதிர்நோக்கி பிள்ளைகளை ஒரு நல்ல நிலைமைக்கு மாற்றிக் கொண்டார்கள் என்பது தொடர்பான அனுபவ பகிர்வும் இடம்பெற்றது.
அடுத்ததாக ஒரு மாற்றுத்திறனாளி மாணவன் ஒருவனை சிறந்த முறையில் அவரை பராமரித்து அவரை அடுத்த நிலைமைக்கு மாற்றி அமைத்த ஒரு முன்பள்ளி ஆசிரியர்களுக்குமான கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இறுதியாக, திருகோணமலை மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் உரையாற்றும் போது, திருகோணமலை மாவட்டத்தில் பகல் நேர பராமரிப்பு நிலையத்தினை சரியான முறையில் இதனை வளப்படுத்தி சகலரின் ஒத்துழைப்புடன் இது ஒரு நல்ல ஒரு வளமாக பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார
இந்நிகழ்வில் சமூக சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் கிண்ணியா பிரதேச செயலகத்தின் உத்தியோகர்கர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


