இலங்கையின் வளர்ந்து வரும் மேசைப்பந்தாட்ட நட்சத்திரமான டாவி சமரவீர (Taavi Samaraweera), உலக மேசைப்பந்தாட்ட வரலாற்றில் தனது பெயரைப் பொறித்துள்ளார்.
11 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் (Under-11 Boys) உலக மேசைப்பந்தாட்ட தரவரிசையில் அவர் 3ஆம் இடத்தைப் பிடித்து, எந்தவொரு வயதுப் பிரிவிலும் இலங்கை மேசைபந்தாட்ட வீரர் ஒருவரால் அடையப்பட்ட உயர்ந்தபட்ச தரவரிசை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனம் இந்த வாரம் வெளியிட்ட புதிய தரவரிசைப் பட்டியலில், டாவி சமரவீர அபாரமான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் 52 இடங்கள் முன்னேறி, 200 தரவரிசைப் புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
தற்போது, உகாண்டாவின் ஜோசப் செபாடிண்டிரா (Joseph Sebatindira) மற்றும் கட்டாரின் ரபியா அல்-குவாரி (Rabeah Al-Kuwari) ஆகியோர் மட்டுமே டாவி சமரவீரவுக்கு முன்னால் தரவரிசையில் உள்ளனர்.
டாவி சமரவீரவின் இந்தச் சாதனை, இலங்கை விளையாட்டுத் துறைக்கு, குறிப்பாக மேசைப்பந்தாட்டத்திற்குப் பெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளது.

