நாட்டில் இடம்பெற்ற விபத்துக்களில் 8 வயது பிள்ளை உட்பட நால்வர் பலி..!

நாட்டில் இடம்பெற்ற விபத்துக்களில் 8 வயது பிள்ளை உட்பட நால்வர் பலி..!

கடந்த 24 மணி நேரத்தில் சில பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் 8 வயது பிள்ளை உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்கள் நேற்று (08) மாத்தளை, தனமல்வில, வெலிகந்த மற்றும் கொட்டவில பொலிஸ் பிரிவுகளில் நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெலிகந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அசேலபுர பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியால் பயணித்த பிள்ளை ஒன்றின் மீது மோதியுள்ளது.

இதில் காயமடைந்த 8 வயது பிள்ளை வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இதேவேளை கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று பாதசாரி மீது மோதுண்டுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 70 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவிக்கின்றன.

இதேவேளை தனமல்வில – வெல்லவாய வீதியில் வேன் ஒன்றும் டிப்பர் ரக வாகனும் நேருக்கு நேர் மோதியதில் வேனின் சாரதி உயிரிழந்தார்.

அதேநேரம் கொட்டவில பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றில் ​மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்தார்.

Recommended For You

About the Author: admin