ஆணியும் பிடுங்க வேண்டாம்..!

ஆணியும் பிடுங்க வேண்டாம்..!
மாவீரர் மாதத்தில் என்னை சுடுங்கள் சபையில் அர்ச்சுனா எம்பி

மாவீரர் மாதத்தில் என்னை சுட்டாலும் பரவாயில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

ஊழலை ஒழிப்பதாக கூறும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இலஞ்சம் பெறுவதாக இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் என்னை சுடுவீர்கள், வெட்டுவீர்கள் பின்னர் அதனை நாமல் ராஜபக்ச செய்த்தாக கை காட்டுவீர்கள் அது எனக்கு பரவாயில்லை என்றும் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம், இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் மக்கள் தமிழீழ மண்ணை கட்டி எழுப்புவார்கள் நீங்கள் எந்த ஆணியும் பிடுங்க வேண்டாம் விசா மட்டும் தாருங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin