கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(06.11.2025) வியாழக்கிழமை காலை9.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் வரவேற்புரையுடன் குறித்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆரம்பமானது. தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தொடர்பான விடயங்களின் கட்டமைப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றுநிருபம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் விளக்கமளித்தார்.
இதன்போது, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. தொடர்ந்து, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஆராயப்படவேண்டிய விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும், கடந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
இதனைவிட கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் வேறு பல விடயங்களும் குறித்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் யாழ் – கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், க.இளங்குமரன், ஜெ.றஜீவன், வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம் எ.அன்ரன் யோகநாயகம், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், வடமாகாண அமைச்சு சார்ந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள், இராணுவ மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர், மாவட்ட திணைக்களங்கள் சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.


