களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பட்டிமன்ற நிகழ்வும், கதாப்பிரசங்கமும்..! 

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பட்டிமன்ற நிகழ்வும், கதாப்பிரசங்கமும்..!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான பட்டிமன்ற நிகழ்வு மற்றும் அறநெறிப்பட சாலை மாணவர்களின் கதாப்பிரசங்க நிகழ்வானது இன்றைய தினம் (06.11.2025) பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

 

இதன் போது “குடும்ப வாழ்க்கையில் மகிழ்வாக இருப்பது ஆண்களா?? அல்லது பெண்களா?? எனும் தலைப்பில் தங்கள் வாத, பிரதிவாதங்களை மிகவும் சிறப்பாகவும், சபையோரை மகிழ்விக்கும் வகையிலும் முன்வைத்திருந்தனர்.

 

இந்த பட்டிமன்ற நிகழ்வுக்கு நடுவராக அபிவிருத்தி உத்தியோகத்தரும், கதிரவன் பட்டிமன்ற பேச்சாளருமாகிய செல்வி A நர்மதா அவர்கள் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் இறுதி நிகழ்வாக அறநெறி பாடசாலை மாணவியின் திருஞானசம்பந்தர் தொடர்பான கதாப்பிரசங்க நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

 

இந்த நிகழ்வில் கணக்காளர் எ. நாகேஸ்வரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், கலாசார உத்தியோகத்தர் வ. பற்பராசா அவர்கள் இந்த நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin