சம்மாந்துறை பிரதேச சபையின் உபதவிசாளரின் முன் மாதிரியான செயல்..!
சம்மாந்துறை பிரதேச சபையின் உபதவிசாளர் திரு. வெள்ளையன் வினோகாந்த் அவர்களால் இன்று புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தில் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட ஐந்து வீதிகள் மோட்டர் கிரேடர் இயந்திரமூலம் மக்கள் பயன்படுத்தக்கூடிய விதத்தில் செப்டம்பிடப்பட்டுள்ளது. இந்த வீதிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் செப்பமிடப்படாமல் மக்களால் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டதனை உப தவிசாளர் அவர்களுக்கு அப்பகுதியில் வாழும் மக்கள் கோரிக்கையாக வீதிகள் தொடர்பான விடயங்களை முன்வைத்தமைக்கு அமைவாக இவ் வீதிகள் இன்று சம்மாந்துறை பிரதேச சபையினால், உப தவிசாளர் உடைய ஏற்பாட்டில் செப்பமிடும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. இச்செயர்ப்பாடுகள் நிமித்தம் அப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

