ஷெங்கன் விசா நியமனங்கள் இனி VFS குளோபல் மூலம் மட்டுமே பதிவு: ஜேர்மன் தூதரகம் அறிவிப்பு
இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகம் ஷெங்கன் விசா (Schengen Visa) விண்ணப்பங்களுக்கான நியமன நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
நேற்று முதல், இனிவரும் காலங்களில் விசா விண்ணப்பங்களுக்கான அனைத்து நியமனங்களும் VFS குளோபல் மூலம் நிர்வகிக்கப்படும் புதிய நிகழ்நிலை (Online) அமைப்பு வழியாக மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், VFS இன் அதிகாரபூர்வ வலைத்தளமான https://visa.vfsglobal.com/lka/en/deu/login என்ற இணைப்பைப் பயன்படுத்தி முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
பழைய முறைப்படி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நியமனப் பதிவுகள் வழக்கம்போல் எந்தவொரு இடையூறும் இன்றிச் செயற்படுத்தப்படும் எனவும் ஜேர்மன் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

