அம்பாறை பகுதி சிறுவர் இல்லத்தில் அரங்கேறிய கொடுமை; நன்னடத்தை அதிகாரி கைது..!

அம்பாறை பகுதி சிறுவர் இல்லத்தில் அரங்கேறிய கொடுமை; நன்னடத்தை அதிகாரி கைது..!

அம்பாறை, தெஹியத்தகண்டியவில் உள்ள சிறுவர்கள் இல்லத்தில் வயது குறைந்த இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில், அம்பாறை பிரிவு மகளிர் மற்றும் குழந்தைகள் பணியகத்தால் நன்னடத்தை அதிகாரி ஒருவர் திங்கட்கிழமை (03) கைது செய்யப்பட்டார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி சி.ஐ தயானி கமகே தலைமையிலான பொலிஸ் குழு இந்த சோதனையை நடத்தியது.

சந்தேக நபர் சிறுமிகளில் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்து, மற்றவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் கூறினார்.

விசாரணைகளைத் தொடங்கிய பின்னர் சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றதாகவும், மஹியங்கனையில் உள்ள அவரது மறைவிடத்தில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் தெஹியத்தகண்டிய நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin