அம்பலாங்கொட நகர சபை அருகே துப்பாக்கிச் சூடு: மோதரை தேவாலயத் தலைவர் பலி
அம்பலாங்கொட நகர சபை வளாகத்திற்கு அருகில் இன்று (நவம்பர் 4) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர் ஆரம்பத்தில் அம்பலாங்கொட நகர சபை உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டார்.
எனினும், காவல்துறை பின்னர் வெளியிட்ட அறிக்கையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் அம்பலாங்கொட மோதரை தேவாலயத்தின் தலைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கரந்தெனிய சுத்தா என அழைக்கப்படுபவரின் மைத்துனர் என்று காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக மோதரை தேவாலயத்தின் தலைவர் உயிரிழந்துள்ளார் என்று காவல்துறை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொட காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

