விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தேசிய விழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே அவர்களின் தலைமையிலும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜெயச்சந்திரமூரத்தி ரஜீவன், கௌரவ கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரின் பங்குபற்றலுடன் இன்றைய தினம் (31.10.2025) காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது வரவேற்புரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச விசேட தேவையுடையோருக்கான தினத்தை கொண்டாடுவதற்காக வருகைதந்துள்ள கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகளை வரவேற்றுக் கொண்டதுடன், கடந்த ஒக்டோபர் 13 ஆம் திகதி நடாத்தப்பட்ட சர்வதேச விசேட தேவையுடையோருக்கான தினம் தொடர்பான கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அது தொடர்பான மேலதிக முடிவுகளை எடுப்பதற்கான இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன், கௌரவ அமைச்சர் அவர்கள் இக் கலந்துரையாடலில் கலந்து கொள்வதையிட்டு மகிழ்வடைவதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் விசேட தேவையுடையோருக்கான தேசிய விழாவானது இம் முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதோடு ஏனைய மாவட்ட ங்களுடன் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களின் பங்குபற்றலுடனும் விசேட தேவையுடையோருக்கான தேசிய விழா நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வு நடைபெறவுள்ள இடம், அழைக்கப்படுவோர் எண்ணிக்கை, விருதுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள், மாற்றுவலுவுள்ளோா் சைகை மொழி , பதாகைகள் காட்சிப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் கௌரவ அமைச்சர் அவர்களுடன் விரிவாக கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந் நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர்கள் திரு.மேனகா கேரத், திருமதி.நளிகா பியசேன, பணிப்பாளர் ஜெயமாலி விக்கிரமாராட்சி, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் திரு சி.டி களு ஆராச்சி, மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மாவட்ட செயலக பதவிநிலைஉத்தியோகத்தர்கள், அமைச்சின் உயர் அதிகாாரிகள் , மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ,கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச்செயலக பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், மாவட்ட சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


