இலங்கை தேர்தல் செயலகத்தால் நடாத்தப்படவுள்ள “பௌர” குறுப்படப் போட்டிக்கான வழிகாட்டல் கருத்தரங்கு..!
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவினால் நடாத்தப்படவுள்ள ” பௌர” ” Stories of POWER OF VOTE” குறும்படப் போட்டிக்கான முன்னாயத்த குறும்பட உருவாக்கம் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு யாழ்ப்பாண ஊடகக் கற்கைகள் துறையின் ஒழுங்கமைப்பிலும் தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டிலும் இன்றைய தினம்(30) காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 1.00 வரை முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ச.மஞ்சுளாதேவி தலைமையில் நடைபெற்றதுடன் முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திருமதி சிந்துசா அவர்கள் கருத்தரங்கினை சிறப்பாக ஒழுமைத்திருந்தார்.
இதன் வளவாளராக அரசாங்க தகவல் திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட ஊடக அலுவலகர் திவாகர், ஊடகவியலாளர் சரன்ராஜ், ஊடகவியலாளர் அபிசேகன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்தக் கருத்தரங்கில் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலையின் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


