ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி அவர்களின் முன் மாதிரியான செயல்..!

ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி அவர்களின் முன் மாதிரியான செயல்..!

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் பாதசாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வரும் வாகனங்களை அகற்றும் பணியில் ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி தலைமையில் கள விஜயம் ஒன்றை இன்று செவ்வாய்கிழமை (28.10.2025) மேற்கொண்டிருந்தனர். இதன்போது வீதியின் இரு மருங்கிலும் நடைபாதைக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் அகற்றப்பட்டதுடன் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டது.

 

ஆலையடிவேம்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளான மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து பிரதான வீதிகளாக காணப்படும் அம்பாறை வீதி மற்றும் சாகாம வீதிகளில் பொதுமக்களின் சஞ்சாரமும் வாகனங்களின் போக்குவரத்து எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுவதுடன் இப்பகுதியில் வீதி விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றது.இவற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும் நடைபாதையில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும் அக்கரைப்பற்று பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டதுடன் வாகன சாரதிகளுக்கும் வீதிகளிகளின் இருமருங்கிலும் உள்ள வியாபாரிகள் மற்றும் நிறுவன உரிமையாளர்களும் இது தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

 

ஆலையடிவேம்பு பிரதேசசபை உறுப்பினர் பாலசுந்தரம் கதீகரன் ,நடராஜா சுமந்தி உட்பட ஆலையடிவேம்பு பிரதேசசபை உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Recommended For You

About the Author: admin