சாணக்கியனுக்கு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு..!

சாணக்கியனுக்கு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு..!

ஆனந்த விஜேபால அறிவிப்பு.

இலங்கைத் தமிழரசுக் கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.

சாணக்கியனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய நிலையில அவரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை,உயிரிழந்த வெலிகம பிரதேச சபையின் தவிசாளர், முன்னதாக, பாதுகாப்புக்கோரி, காவல்துறைமா அதிபர் மற்றும் பிரதி காவல்துறை மா அதிபருக்கு கடிதம் அனுப்பியிருந்ததாக ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.

அதன்பின்னர் அவருக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்தநிலையில், மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது சிறந்த ஒருவரை தெரிவு செய்தால் அவர்களுக்கு எவ்வித அச்சமும் இன்றி காவல்துறை பாதுகாப்பை வழங்க முடியும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடகமொன்றுக்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin