கோடை முடிந்து குளிர் காலம் துவங்கும் போது தோலில் ஏற்படும் வறட்சிக்கு காரணம் குளிர் காலத்தில் தண்ணீர் குறைவாக குடிப்பதனால் தோலின் ஈரப்பதம் குறைவாகவே இருக்கும்.
மற்ற பருவங்களை ஒப்பிடுகையில் மகரந்த துகள்கள் குளிர் காலத்தில் அதிகம் காற்றில் பரவக் கூடியவை அவற்றின் தன்மையும் வழக்கத்தைக் காட்டிலும் மாறுபட்டதாக இருக்கும்.
பாதுகாப்பு
வறட்சியான தோலை தவிர்க்க, தினமும் 3 – 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
நீர்ச் சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகளை நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தோலின் தன்மைக்கு ஏற்ற ஈரப்பதத்தை தக்க வைக்கும் ‘கிரீம், லோஷன்’களை பயன்படுத்த வேண்டும். குளித்து முடித்ததும் ஈரமான தோலில் தடவ வேண்டியது முக்கியம் அப்போது தான் தோலின் ஈரப்பதம் நன்றாக இருக்கும்.
தலைமுடி பராமரிப்பும் முக்கிய ஒன்றாகும்.தலையின் மேல்புறத் தோலில் வறட்சி ஏற்பட்டு பொடுகு, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். வாரத்திற்கு ஒரு முறையாவது தலையின் மேல்புறத்தில் தலைமுடியின் வேர்க்கால்களில் எண்ணெய் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். குறைந்தது 30 நிமிடங்கள் வைத்திருந்து கழுவ வேண்டும்.
தலையில் எண்ணெய் தடவி இரவு முழுதும் அப்படியே துாங்குவது தவறு. அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்கு மேல் எண்ணெய் மசாஜ் செய்த தலை, தோலுடன் இருப்பதை தவிர்க்க வேண்டும்.