பூநகரி – வலைப்பாடு – ஜெகமீட்பார் விளையாட்டுக்கழகத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி..!

பூநகரி – வலைப்பாடு – ஜெகமீட்பார் விளையாட்டுக்கழகத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி..!

இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையோடு கிளிநொச்சி – பூநகரி – வலைப்பாடு – ஜெகமீட்பார் விளையாட்டுக்கழகத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்றவரும் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றன.

 

வலைப்பாடு ஜெகமீட்பார் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டிகள் பகல் இரவு ஆட்டங்களாக இடம்பெற்றன.

 

அரை இறுதிப் போட்டிகளில், வடமராட்சி வதிரி டைமன் அணியை எதிர்த்து வடமராட்சி – நவஜீவன் அணியும், மயிலங்காடு ஞானமுருகன் அணியை எதிர்த்து பாசையூர் சென் அந்தோணிஸ் அணியும் மோதின.

 

வதிரி டைமன் அணிக்கும், வடமராட்சி நவஜீவன் அணிக்கும் இடையிலான போட்டியில், வதிரி டைமன் அணி தண்டனை உதைகள் மூலம் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

 

இந்தப் போட்டியில், வதிரி

டைமன் அணி, போட்டியின் எட்டாவது நிமிடத்தில் தனது முதலாவது கோலைப் போட்டது.

 

பதிலுக்கு வடமராட்சி நவஜீவன் அணி போட்டியின் 74 ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் போட்டு போட்டியைச் சமன் செய்தது.

 

ஆட்ட நிறைவின்போது இரு அணிகளும் 01:01 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தமையால், இரண்டு அணிகளுக்கும் தண்டனை உதைகள் வழங்கப்பட்டன.

 

தண்டனை உதைகள் மூலம் வதிரி டைமன் அணி 08:07 என்ற கணக்கில் ஆட்டத்தைத் தனதாக்கி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

 

இதேவேளை, பாசையூர் சென் அந்தோணிஸ் அணிக்கும், மயிலங்காடு ஞானமுருகன் அணிக்கும் இடையில் இடம்பெற்ற அரையிறுப் போட்டியில், பாசையூர் சென் அந்தோணிஸ் அணி தண்டனை உதைகள் மூலம் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது.

 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், பாசையூர் சென்ட் அந்தோணி அணி, ஐந்தாவது நிமிடத்தில் தனது முதலாவது கோலைப் போட்டது.

 

பதிலுக்கு மயிலங்காடு ஞானமுருகன் அணி ஆட்டத்தின் 24 ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் போட்டு ஆட்டத்தை சமநிலை செய்தது.

 

ஆட்ட நேர முடிவின்போது அணிகள் 01:01 கோல்கள் கணக்கில் சமநிலையில் இருந்தமையால், தண்டனை உதைகள் மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.

 

அதற்கமைய,பாசையூர் சென் அந்தோணிஸ் அணி, 08: 07 என்ற உதைகள் மூலம் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

 

இறுதிப் போட்டியில், பாசையூர் சென் அந்தோணிஸ் அணி மற்றும் வதிரி டைமன் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin