முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு அழைப்பாணை: தங்காலையில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச அவர்களுக்கு, நாளை மறுநாள் தங்காலை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
’பெலியத்த சனா’ என்ற நபர் குறித்து அவர் ஊடகங்களிடம் தெரிவித்த கருத்து தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைக்காகவே இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
அவர் குறித்த தினத்தில் காலை 10 மணிக்கு தங்காலை பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

