வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு உதைபந்தாட்ட சீருடை அனுசரனை..!
யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன விளையாட்டு நிகழ்வின் உதைபந்தாட்ட இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன உதைபந்தாட்ட அணியினருக்கான உதைபந்தாட்ட சீருடையினை இன்றையதினம்(3) பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான வேலாயுதம்பிள்ளை சசிக்காந் மற்றும் கிருஷ்ணகோபால் கணைச்செல்வன் ஆகியோர் வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் வி ஜெ நிதர்சன்
அவர்களிடம் வழங்கியிருந்தனர்.

