முனைக் கடற்கரையில் சிறுவர் மகிழ்வகம் திறந்துவைப்பு..!
டனுசா மரைன் (Dhanusha marine) நிறுவனத்தினரால் ரூபா ஒரு மில்லியன் பெறுமதியில் அமைக்கப்பட்ட சிறுவர் மகிழ்வகம் இன்று திறந்துவைக்கப்பட்டது.
குறித்த திறப்பு விழா நிகழ்வு பருத்தித்துறை நகரபிதா வின்சன் தீ போல் டக்ளஸ் போல் தலமையில் பருத்தித்துறை முனை கடற்கரையில் இடம் பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டன. சுடர்களை மதகுருமார்களான பால சதீஸ்வர சர்மா, கிறிஸ்தவ மதகுரு வின்சன் பற்றிக், டனுசா மரைன் உரிமையாளர் சுமித்திர பெர்ணாண்டோ, செயலாளர் திருமதி தாரணி கஜரூபன், உட்பட பலரும் ஏறறிவைத்ததை தொடர்ந்து ஆசியிரைகளை மதகுருமார்கள் நிகழ்த்தினர். தலமை உரையினை பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் நிகழ்த்தினார்.
கருத்துரைகளை பருத்தித்துறை நகரசபை செயலாளர், டனுச மரைன் நிறுவன உரிமையாளர் சுமித்திர பெர்ணாண்டோ, நிகழ்த்தினார்கள்.
தொடர்ந்து சிறுவர் மகிழ்வக பெயர்ப்பலகையினை டனுச மரைன் உரிமையாளர் சுமித்திர பெர்ணாண்டோ மற்றும் சபை தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் ஆகியோர் திரை நீக்கம் செய்துவைத்தனர்.
நன்றியுரையினை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி வழங்கினார்.
அதனை தொடர்ந்து கலட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலை மற்றும் சென்தோமஸ் பெண்கள் பாடசாலை ஆகியவற்றில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பரிசிப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பருத்தித்துறை நகரசபை உப தவிசாளர் தேவசிகாமணி தெய்வேந்திரம், நகரசபை உறுப்பினர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், கிராம மக்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


