2026 – 2029 தேர்தல் மூலோபாயத் திட்டம் நவம்பரில் வெளியிடப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு
2026ஆம் ஆண்டு முதல் 2029ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான தேர்தல் மூலோபாயத் திட்டம் (Election Strategic Plan), நவம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் தயாரிப்புப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்கூட்டிய தேர்தல்கள் தொடர்பான புதிய சட்டங்களை வரைவதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

