முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் சந்திப்பு:
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை (28) தங்காலையில் உள்ள கார்ல்டன் மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
கதிர்காமத்தில் இருந்து கொழும்பு செல்லும் பயணத்தின் போது விக்ரமசிங்க இந்தச் சந்திப்பை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பின் போது, தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷ அளித்த ஆதரவுக்கு ரணில் விக்ரமசிங்க தனது நன்றியைத் தெரிவித்தார்

