“இளைஞர்களின் பார்வையில் முதுமைப் பருவம்” முதியோர்கள் தொடர்பில் இளைஞர் சமுதாயத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்வு..!
இளைஞர்களின் பார்வையில் முதுமைப் பருவம் எனும் தொனிப் பொருளின் கீழ் முதியோர்கள் தொடர்பில் இளைஞர் சமுதாயத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டமானது சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் சி.மகேஸ்வரன் அவர்களின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எ.எம்.எ.ஹனிபா மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் B.வாசித் அகமெட் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
அத்துடன் இந்நிகழ்வில் வளவாளர்களாக சம்மாந்துறை பிரதேச வைத்திய சாலையின் வைத்திய அத்தியசகர் வைத்தியர் பிரபா சங்கர் மற்றும் அரச நிறுவனம் சார பயிற்றப்பட்ட பயிற்சியாளர் T.D. பத்ம கைலநாதன் அவர்களும் கலந்து கொண்டதுடன் சம்மாந்துறை பிரதேச செயலக உளவளத்துணையாளர் M.F.பர்ஷானா காரைதீவு பிரதேச செயலக முதியோர் வள மேம்பாட்டு உத்தியோகத்தர் A. மதுசூதனன் அவர்களும் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது இன்றைய இளைஞர்களுக்கும் முதியோர்களுக்கும் இடையிலான உறவு இளைஞர்கள் ஏன் முதியோர்கள் சிறந்த உறவினை பேண வேண்டும் என்பது பற்றியும் பேசப்பட்டதுடன் முதியோர்களுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் பற்றியும் தொற்றா நோய்கள் பற்றியும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் முதியோர்கள் பின்பற்ற வேண்டிய உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றியும் பொருளாதார ரீதியாக வெற்றிகரமாக முதுமை பருவத்தினை எதிர்கொள்ளுதல் சமூக ரீதியாகவும் முதிர் வயதை வெற்றிகரமாக எதிர்கொள்ள திட்டமிடுதல் பற்றியும் முதிர் வயதை நோக்கி இளைஞர்களது கடமைகள் பொறுப்புக்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.


